என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பழனி முருகன் கோவில்"
பழனி:
3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் திருவிழா என வருடம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு ரோப்கார், விஞ்சு மற்றும் யானை, படிப்பாதைகள் வழியாக பக்தர்கள் சென்று வருகின்றனர்.
3 நிமிடத்தில் மலைக்கோவிலுக்கு சென்று விடலாம் என்பதால் பல்வேறு தரப்பினரும் இதனை பயன்படுத்தி வருகின்றனர். ரோப்கார் தினமும் ஒரு மணி நேரம், மாதம் ஒருநாளும் வருடத்திற்கு ஒரு மாதமும் பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்படும். அப்போது ரோப்கார் பெட்டிகள், பல் சக்கரங்கள், இழுவை கம்பிகள் ஆகியவற்றை பராமரித்து வருகின்றனர்.
அதன்படி நாளை பராமரிப்பு பணி உள்ளதால் ரோப்கார் சேவை நிறுத்தப்படும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பக்தர்கள் மின் இழுவை ரெயில் மற்றும் படிப்பாதையை பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவுறுத்தி உள்ளனர்.
தமிழகத்தில் நிலக்கோட்டை, அரவக்குறிச்சி உள்ளிட்ட 22 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தல் பாராளுமன்ற தேர்தல் தேர்தலை காட்டிலும் தமிழகத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில் தமிழகத்தில் ஆட்சியை தொடரவும், புதிய ஆட்சியை அமைக்கவும் ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகளுக்கு ஒரு திறவுகோல் போல் உள்ளது.
இந்நிலையில் பழனி முருகன் கோவிலுக்கு அரவக்குறிச்சி அ.தி.மு.க. வேட்பாளர் செந்தில்நாதன், தி.மு.க. வேட்பாளர் செந்தில்பாலாஜி ஆகியோர் தனித்தனியாக வந்தனர். பின்னர் அவர்கள் மாலையில் நடக்கும் சாயரட்சை பூஜையில் கலந்து கெண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனையடுத்து நிலக்கோட்டை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் தேன்மொழி, தி.மு.க. வேட்பாளர் சவுந்தரபாண்டியன் ஆகியோரும் பழனி முருகன் கோவிலுக்கு தனித்தனியாக வந்து, சாமி தரிசனம் செய்தனர்.
பழனி முருகன் கோவிலுக்கு ஒரே நேரத்தில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி வேட்பாளர்கள் சாமி தரிசனம் செய்ய வந்தனர், தங்கள் தொகுதியில் வெற்றி பெறுவதற்காக வேண்டிக் கொண்டனர். செவ்வாய்க்கிழமை முருகனுக்கு உகந்த நாள் என்பதாலும், வைகாசி விசாகத்தின் கடைசி நாள் என்பதாலும் தேர்தல் வெற்றிக்காக வேட்பாளர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.
திருவிழாவையொட்டி நேற்று முன் தினம் இரவு வாஸ்து சாந்திபூஜை, புனிதமண் எடுத்தல், அஸ்திரதேவர் வலம் வருதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நேற்று காலை பெரியநாயகி அம்மன் கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு பூஜைகளும், 16 வகை அபிஷேகமும், அலங்காரமும் செய்யப்பட்டது. பின்னர் சப்பரத்தில் எழுந்தருளிய முத்துக்குமாரசுவாமி உட்பிரகாரம் வலம்வந்து, கொடிக்கட்டு மண்டபத்தில் அருள் பாலித்தார்.
பின்னர் மண்டபத்தில் வைத்து விநாயகர் பூஜை, கொடிமரம், கொடிபடத்துக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றதை தொடர்ந்து, காலை 9.40 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் ‘அரோகரா’ கோஷம் எழுப்பினர். பின்னர் கொடிமரம், முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
10 நாட்கள் கொண்டாடப்படும் திருவிழாவில் தினசரி காலை தந்த பல்லக்கிலும், இரவில் தங்க மயில், வெள்ளியாலான காமதேனு, யானை, தங்ககுதிரை போன்ற வாகனத்தில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருவுலா காட்சி நடைபெறுகிறது. 6-ம் திருநாளில் மாலை 6.30 மணிக்கு மேல் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது. 7-ம் திருநாளில் தேரோட்டம் நடைபெறுகிறது.
விழாவையொட்டி 10 நாட்களும் பெரியநாயகி அம்மன் கோவிலில் தினசரி மாலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை மங்கல இசை, பக்தி சொற்பொழிவு, பக்தி இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. கொடியேற்ற நிகழ்ச்சியில் பழனி கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார் மற்றும் கோவில் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
பழனி:
முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் படிப்பாதை, ரோப்கார், மின்இழுவை ரெயில் ஆகியவை மூலமாக மலைக்கோவில் செல்கின்றனர்.
இதில் விரைவாக செல்வதில் ரோப்கார் முதலிடம் பிடிப்பதால் மலைக்கோவிலுக்கு செல்ல குழந்தைகள், பெரியோர்கள் என அனைவரின் முதல் விருப்பமாக அது உள்ளது. இந்த ரோப்கார் சேவை காற்றின் வேகத்தை பொறுத்து இயக்கப்படுகிறது. இதற்காக மலைக்கோவிலில் காற்றின் வேகத்தை கணக்கிடும் நவீன கருவி உள்ளது.
காற்று அதிகம் வீசும் நேரங்களில் ரோப்கார் சேவை நிறுத்தப்படும். மேலும் மாதத்திற்கு ஒரு நாள் மற்றும் ஆண்டுக்கு ஒரு மாதம் என பராமரிப்பு பணிக்காக ரோப்கார் சேவை நிறுத்தப்படுகிறது. அந்த வகையில் நாளை (புதன்கிழமை) ரோப்கார் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதை முன்னிட்டு அன்று ரோப்கார் சேவை நிறுத்தப்படுகிறது.
ஆனால் மின்இழுவை ரெயில் சேவை வழக்கம்போல் செயல்படும். எனவே மலைக்கோவிலுக்கு செல்ல பக்தர்கள் மின்இழுவை ரெயில், யானைப்பாதை ஆகியவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் அவர்கள் பழனி ஐவர்மலை முருகன் கோவில், பழனி மலைக்கோவில் ஆகியவற்றுக்கு தங்க ஆசனம், பாதங்கள் எடுத்து சென்று சிறப்பு பூஜைகள் செய்தனர். அதன்பிறகு ஆசனம், பாதங்களை அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் ஏற்றி கிரிவீதியில் ஊர்வலமாக கொண்டு சென்றனர். ஊர்வலத்தில் பங்கேற்ற பக்தர்கள், 8 அடி உயரம் கொண்ட கேரள பாரம்பரியமிக்க 3 கோபுர காவடிகளுடன் பங்கேற்றனர். இன்று (திங்கட்கிழமை) பாதம் மற்றும் ஆசனம் கார் மூலம் சென்னை கொண்டு செல்லப்படுகிறது. அதன்பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் லண்டனுக்கு கொண்டு செல்லப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பழனி முருகன் கோவிலில், கடந்த மாதம் 28-ந்தேதி உண்டியல் எண்ணிக்கை நடைபெற்றது. அதன் பின்னர் 29 நாட்களுக்கு பிறகு மலைக்கோவில் கார்த்திகை மண்டபத்தில் உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணி நடந்தது.
கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார், திண்டுக்கல் உதவி ஆணையர் சிவலிங்கம், மேலாளர் உமா, முதுநிலை கணக்கு அதிகாரி மாணிக்கவேல், அறநிலையத்துறை ஆய்வாளர் கணேசன் ஆகியோர் முன்னிலையில் உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணி நடந்தது.
இதில் ரூ.1 கோடியே 67 லட்சத்து 19 ஆயிரத்து 150-ஐ பக்தர்கள் காணிக்கையாக உண்டியல்களில் செலுத்தியிருந்தனர். மேலும் தங்கம் 1 கிலோ (1,120 கிராம்), வெள்ளி 8¾ கிலோ (8,750 கிராம்), வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 681-ம் பக்தர்களால் காணிக்கையாக போடப்பட்டிருந்தது.
இது தவிர தங்கத்தால் ஆன வேல், சங்கிலி, மோதிரங்கள், வெள்ளி வேல், வெள்ளிப்பாதம், வெள்ளி வீடு, வெள்ளி காவடி, கிரீடம் மற்றும் வெள்ளி பொருட்களும் பட்டம், பரிவட்டம், நவதானியங்கள், பாத்திரங்கள், கடிகாரம், பட்டு வேஷ்டி போன்ற பல்வேறு பொருட்களும் உண்டியல்களில் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.
பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் படிப்பாதை, யானைப்பாதை, மின்இழுவை ரெயில், ரோப்கார் ஆகியவற்றின் மூலம் மலைக்கோவிலுக்கு சென்று வருகின்றனர். இதில் ரோப்கார் மூலம் 3 நிமிடங்களில் மலைக்கோவிலுக்கு சென்றுவிடலாம் என்பதால் பகதர்களின் முதல் தேர்வாக ரோப்கார் சேவை உள்ளது.
இத்தனை சிறப்பு வாய்ந்த ரோப்காரில் பக்தர்களின் பாதுகாப்புக்காக தினசரி, மாதாந்திர மற்றும் வருடாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். அதன்படி தினசரி மதிய உணவு இடைவேளையின் போது ஒரு மணி நேரமும், மாதத்துக்கு ஒரு முறை நாள் முழுவதும் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுவது வழக்கம்.
இதேபோல் வருடாந்திர பராமரிப்பு பணியின் போது சுமார் 40 நாட்களுக்கு ரோப்கார் சேவை நிறுத்தப்படும். அந்த வகையில், கடந்த மாதம் 12-ந்தேதி ரோப்காரில் வருடாந்திர பராமரிப்பு பணிகள் தொடங்கியது. ரோப்கார் நிலையத்தின் மேல், கீழ் தளங்களில் உள்ள உபகரணங்கள் கழற்றப்பட்டு பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் நேற்று காலை ரோப்கார் மேல்தளம், கீழ்தளத்தில் உள்ள சக்கரங்களுடன் கம்பிவடம் பொருத்தப்பட்டு பெட்டிகளை இணைக்கும் பணி நடந்தது. பின்னர் மாலையில் ரோப்காரில் முதற்கட்ட சோதனை ஓட்டம் நடந்தது. இதுகுறித்து கோவில் அதிகாரிகளிடம் கேட்ட போது, ரோப்கார் பராமரிப்பு பணி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. முதற்கட்ட சோதனை ஓட்டமும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. விரைவில் அனைத்து பரிசோதனைகளும் நிறைவு செய்யப்பட்டு ரோப்கார் சேவை பக்தர்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்றனர்.
வைகாசி மாத கார்த்திகை விழாவையொட்டி, பழனி மலைக்கோவிலில் தர்ம தரிசனம், சிறப்பு தரிசனம், கட்டளை தரிசனம், கால பூஜை தரிசனத்துக்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாலை 6 மணிக்கு மேல் மலைக்கோவில் தெற்கு வெளிப்பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து தங்கமயில் வாகனத்தில் சின்னக்குமாரர் எழுந்தருளி உட்பிரகாரம் வலம் வந்தார். பின்பு இரவு 7 மணிக்கு சின்னக்குமாரர் தங்கரதத்தில் எழுந்தருளினார். அதையடுத்து தங்கரத புறப்பாடு நடந்தது. விழா ஏற்பாடுகளை பழனி கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.
7-ம் திருநாள் தேரோட்டம் நடந்தது. நிறைவு நாளான நேற்று காலை முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு 16 வகை அபிஷேகம் நடைபெற்று சப்பரத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. சுவாமி 4 ரத வீதிகளில் உலா வந்தார்.
அப்போது வைகாசி விசாக திருநாளில் வள்ளியை, முருகன் திருமணம் செய்ததால் மன வருத்தம் அடைந்த தெய்வானை முருகனிடம் கோபித்து கொண்டு தனியாக பல்லக்கில் எழுந்தருளி கோவில் கதவை அடைத்து கொள்ளும் நிகழ்ச்சியும், பின்னர் முருகனின் தூதுவர்கள் ஊடல் பாடல்களை 3 முறை தெய்வானையிடம் பாடி அவரை சமாதானம் செய்து முருகனிடம் சேர்த்து வைக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதையொட்டி ஊடல் பாடல்களை ஓதுவார் நாகராஜன் பாடினார்.
அதைத்தொடர்ந்து முத்துக்குமாரசுவாமியுடன், வள்ளி- தெய்வானை இணைந்து சப்பரத்தில் எழுந்தருளி முத்துக்குமாரசுவாமி மண்டபத்தில் தீபாராதனை நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பூஜை நிகழ்ச்சிகளை கோவில் பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், செல்வசுப்பிரமணியம் குருக்கள் மற்றும் குருக்கள்கள் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பழனி கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார் மற்றும் கோவில் அலுவலர்கள் செய்துள்ளனர்.
10 நாட்கள் கொண்டாடப்படும் இத்திருவிழாவின் 6-ம் நாளான நேற்று முன்தினம் முத்துக்குமாரசுவாமி, வள்ளி- தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவின் 7-ம் நாளான நேற்று மாலை வைகாசி விசாக தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக காலை 9 மணிக்கு மேல் திருத்தேரேற்ற நிகழ்ச்சி நடந்தது. பின்னர் மாலை 4.30 மணிக்கு திருத்தேரில் எழுந்தருளிய முத்துக்குமாரசாமி, வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடைபெற்றது.
கோவில் யானை கஸ்தூரி, தேரை முட்டி தள்ளிய காட்சி.
இதைத்தொடர்ந்து பழனி கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார், போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துராஜா மற்றும் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். பக்தர்கள் வெள்ளத்தில் கிழக்கு ரதவீதி, தெற்கு ரதவீதி, மேற்கு ரதவீதி, வடக்கு ரதவீதி வழியாக சென்ற தேர் பின்னர் நிலை வந்து சேர்ந்தது.
முன்னதாக மேடான பகுதிகளை கடக்க முடியாமல் தேர் நிற்கும் போது கோவில் யானை கஸ்தூரி தேரை முட்டித்தள்ளி நகர்த்தியது. தேர் நிலையை அடைந்ததும் சிறப்பு பூஜை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இரவு பெரிய தந்தப்பல்லக்கில் தேர்கால் பார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 8.30 மணிக்கு தங்க குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. 9-ம் நாளான நாளை (புதன்கிழமை) இரவு மயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடும், 10-ம் நாள் இரவு சப்பரத்தில் சுவாமி புறப்பாடும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகள் பழனி கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டிருந்தது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்